Om Namo Bagavathey Sri Aurobindhaya
முழுமையின் பாதையில் முன்னேற விரும்புபவன் ஒருநாளும்
வழியில் ஏற்படும் இடர்களைப்பற்றிக் குறை கூறலாகாது.
ஏனெனில் வாழ்க்கையில் ஒவ்வொரு இடரும் புதிய
முன்னேற்றத்துக்கான வாய்ப்பாகும். குறைக்கூறுவது
பலவீனத்தின் அறிகுறி .நேர்மையின்மையின் அறிகுறி
இன்னல்களை முன்கூட்டியே எதிர்பார்க்காதே. இன்னல்களை
கடப்பதற்கு அதுவல்ல வழி. அது இன்னல்களை வரவழைக்கவே
செய்யும். சாதனையில் முன்னேற வேண்டும் என்று நீ விரும்பும்
பொழுது நீ வெல்ல நினைக்கும் இன்னல்கள் பத்து மடங்காகி
மேலும் தீவிரமடைவது வழக்கம்.
பொறுமையுடன் இரு. விடா முயற்சியுடன் இரு. அது போதும்.
இன்னல்கள் தாமாகவே விலகிப்போய்விடும்.
திரும்பத் திரும்ப ஒன்றையேதான் சொல்வேன். அசையாத
அமைதியான நம்பிக்கையும் துணிவும் தான் இன்னல்களை
வெல்வதற்கான, கடப்பதற்கான ஒரே வழி. இன்னல்களை
வெல்வதற்கான வலிமை ஒரு புன்முறுவலில் தான் உள்ளது.
நேட்டுயிர்ப்பில் அல்ல.
மிகவும் பயங்கரமான வியாதி எது தெரியுமா ?. சோம்பல்தான்
முன்னேற்றத்தில் நாட்டமில்லாதைத்தான் களைப்பு காட்டுகிறது.
களைப்பையோ, சோர்வையோ உணரு கிறாயானால் உனக்கு
முன்னேற்றத்தில் இச்சை இல்லை என்பதுதான் பொருள்.
தீமை எதுவென்றால் அடிமைத்தனம்தான். துறவுக்கும் அடிமைப்
படலாகாது. தேவைகளுக்கும் அடிமைப்படலாகாது. எது
வருகிறதோ அதை ஏற்றுக்கொள். அது போய்விடுமானால்
அதை இழக்கவும் சித்தமாக இருக்க வேண்டும்
ஆசைகளை அனுபவித்து விடுவது விடுபடுவதற்கான
முறையல்ல. ஆசைக்கு ஒரு அளவில்லை. ஒன்றை
அனுபவித்து முடிந்ததும் மற்றொன்று கிளைத்து விடும்.
ஒன்றின் பின் ஒன்றாக அவை பெருகும்.
எதிராளி சொல்வது செய்வது தவறு என்றும், தான் சொல்வது,
செய்வதே சரியென்றும் உறிதிப்படுத்த ஆவலாக இருப்பது
ஆன்மீக சமரசத்தை நிலைநாட்டுவதற்கு பெரிதும் தடையாகும்.
தெய்வ அருளில் நம்பிக்கைஇன்மை தான் கவலை என்பது.
உன்னுடைய சமர்ப்பணம் முழுமையாக இல்லை.அரைகுறையாக
உள்ளது என்பதைத் தான் அது காட்டுகிறது.
எனவே கவலையை விடு. செய்வதை யெல்லாம் நேர்மையுடன்
செய்து விட்டு விளைவுகளை இறைவன்பால் விட்டுவிடு
- ஸ்ரீ அன்னை.